மாவீரர் தினத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடாதென யாழ் மேல் நீதிமன்றத்தில் மாவீரனின் தாய் மனு!

images 14
images 14

மாவீரர் தினத்தில் உயிரிழந்த தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்துவதை  தடைசெய்யக்கூடாதென காவ்துறையினர், சுகாதாரத்துறையினருக்கு எழுத்தாணை கட்டளை வழங்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் (சின்னத்துரை ரவீந்திரன்) அவர்களின் தாயாரான கம்பர்மலையை சின்னத்துரை மகேஸ்வரி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை இன்று (17) தாக்கல் செய்துள்ளார்

உயிரிழந்த உறவுகளிற்கு அஞ்சலி செய்வதை தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டங்களின் மூலம் தடைசெய்யக்கூடாதென காவற்துறையினர், சுகாதாரத்துறையினருக்கு எழுத்தாணை கட்டளை வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரதிப் காவற்துறை மா அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு இந்த கட்டளையை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது