இந்த வரவு செலவு திட்டத்தை நாம் ஆதரிக்க மாட்டோம் – சம்பந்தன் சாடல்

Sampanthan 2811
Sampanthan 2811

இந்த வரவு – செலவுத் திட்டத்தை நாம் ஆதரிக்கவேமாட்டோம். நிச்சயம் எதிர்த்தே வாக்களிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த வரவு – செலவுத் திட்டம் நாட்டையும் மக்களையும் மேலும் கடன் பொறிக்குள் சிக்கவைத்துள்ளது. ஏற்கனவே நாடு பாரிய கடன் பொறிக்குள் அகப்பட்டு சர்வதேசத்திடம் தொடர்ந்து கையேந்தும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மிகவும் மோசமான வரவு – செலவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.

நாடு கடன் பொறியில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அபிவிருத்தி எப்படி சாத்தியமாகும்? இது நாட்டு மக்களை ஏமாற்றும் மிகவும் மோசமான வரவு – செலவுத் திட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இதனூடாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மீது மேலும் சுமைகளை அரசு ஏற்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.