எமது உறவுகளின் கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : வி.எஸ்சிவகரன்!

fgh
fgh

எமது உறவுகளின் கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“உணர்வு பூர்வமாக தமது பிள்ளைகளுக்காக அஞ்சலி செலுத்துகின்ற ஒரு நிகழ்வாக அவர்களின் ஆத்மார்த்தமான கண்ணீரை சிந்துவதற்கான ஒரு நாளாக நவம்பர் 27 இருந்து வந்தது.

பல ஆயிரக்கணக்கான உயிர்கள் இலட்சியத்திற்காக மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் என்கின்ற சர்வதேச நியம முறைகளுக்கு அப்பால் இவ்வருடம் நீதிமன்றங்கள் ஊடாக தடை பெறப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நீதிமன்றத்தை தவறான முறையிலே தொடர்ச்சியாகவே உபயோகித்து வருகின்றனர்.

மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் தடை உத்தரவு பெற்றிருக்கின்றார்கள். கோயிலில் கஞ்சி காய்ச்ச ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அருட்தந்தை ஒருவர் உட்பட ஐவருக்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.

என்னைத் தவிர ஏனைய நான்கு பேரும் மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்கள்.நீதிமன்றத்தின் நேரத்தையும்,நீதிமன்றத்தையும் இந்த காவல்துறையினர் தவறான வழிகட்டுதல் செய்கின்றனர்.

காவல்துறையினரின் செயல்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்