அச்சுறுத்தலுக்கு மத்தியில் அளம்பில் துயிலுமில்லத்தில் துப்பரவுப்பணி!

vlcsnap 2020 11 19 23h02m15s584 Copy 2 resized
vlcsnap 2020 11 19 23h02m15s584 Copy 2 resized

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில்காவல்துறையினர் இராணுவத்தினர் மற்றும், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு மத்தியில் துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

IMG 6449 resized 2
IMG 6449 resized 2

குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் 20.11.2020 இன்றையநாள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள் இணைந்து துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

vlcsnap 2020 11 20 00h23m20s645 resized 1

அப்போது அங்கு வருகைதந்த காவல்துறையினர் , அங்கு துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து குறித்தபகுதி இராணுவத்திற்கு உரியதெனவும், துயிலுமில்ல வளாகத்திலிருந்து விலகிச் செல்லுமாறும் கூறியிருந்தனர்.

vlcsnap 2020 11 20 00h33m34s346 resized 1

இதேவேளை அப்பகுதிக்கு வருகைதந்த புலனய்வாளர்கள் மற்றும், இராணுவத்தினர் அங்கு துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம், வீடியோ எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

vlcsnap 2020 11 20 00h23m25s110 resized 2

இருப்பினும் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள் இணைந்து துப்பரவுப் பணிகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

vlcsnap 2020 11 19 23h02m15s584 Copy Copy resized 1