பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது ஆபத்து மிக்கது- நா.உ சமிந்த விஜேசிறி!

school
school

சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றும் (20.11.2020) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இது தொடர்பில் வினவியதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கல்வியமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது ஆபத்து மிக்கது என நாட்டு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது´ என சமந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

அவரின் மேற்படி கருத்துக்கு பதிலளித்த கல்வியமைச்சர்,

´இது எழுந்தமானமாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல மாறாக பாடசாலைகளின் அதிபர்கள், சிரேஸ்ட ஆசிரியர்கள் மற்றும் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்பட்டது.´

இதன்போது குறுக்கிட்ட சமிந்த விஜேசிறி வைத்தியர்களின் ஆலோசனைகளை விமர்சிக்கவில்லை என்றாலும், கொரோனா தொற்று ஏற்பட்டால் அதன் பொறுப்பை பிள்ளைகளா ஏற்க வேண்டும்? என வினவினார்.

இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர்,

´இல்லை பிள்ளைகள் மீது விரல் நீட்ட அனுமதிக்க போவதில்லை. அரசாங்கம் என்ற வகையில் பிள்ளைகளில் உச்சக்கட்ட சுகாதார நலனை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.´ ஏன்றார்.