உறவுகளை நினைவு கூருவதற்குத் தடை விதிக்க மல்லாகம் நீதிமன்றம் மறுப்பு!

Mallagam Court
Mallagam Court

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குத் தடை விதிக்க மல்லாகம் நீதிமன்றம் மறுத்துள்ளது.

எனினும்காவல்துறையினரால் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால் அவர்களைக் கைதுசெய்யுமாறு காவல்துறையினருக்கு பணித்த நீதவான், நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க மறுத்து கட்டளை வழங்கினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை காவல்துறை பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்று காங்கேசன்துறை காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு மீதான கட்டளை இன்றைய தினத்திற்கு திகதியிட்டு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், குறித்த மனு மீதான விசாரணை இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

இந்நிலையில், எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான திருக்குமரன், மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இலங்கையின் சட்டதிட்டங்களை மீறமாட்டோம் என வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இந்தக் கட்டளை வழங்கப்பட்டது.