சற்று முன்னர் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட சிவாஜிலிங்கம்!

MK Sivajilingam Released on Bail
MK Sivajilingam Released on Bail

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து இன்று(20.11.2020) வெள்ளிக்கிழமை இரவு வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.