வவுனியாவில் மாவீரர் தினம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு!

IMG 20201121 WA0108 1
IMG 20201121 WA0108 1

வவுனியாவில் மாவீரர் தினம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவீரர் நாள் வாரம் இன்று (21). ஆரம்பமாகியுள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

IMG 20201121 WA0086
IMG 20201121 WA0086

வவுனியா நகரசபை முன்பக்கம், ஏ9 பாதை மற்றும் வவுனியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் நடை பயணம் மேற்கொள்ள 20.11.2020 தொடக்கம் 29.11.2020 வரை வவுனியா நீதிமன்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

IMG 20201121 WA0088
IMG 20201121 WA0088

இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கா.ஜெயவனிதா, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் இ.ராஜ்குமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கியஸ்தர் சிவபாதம் கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் செல்வநாயகம் அரவிந்தன் ஆகியோரது பெயர் குறிப்பிட்டு குறித்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

IMG 20201121 WA0108
IMG 20201121 WA0108

இந்நிலையில் வவுனியா நகரசபை வாயில் முன்பாகவுள்ள பொங்கு தமிழ் நினைவுத்தூபி, காணாமல் ஆக்கப்பட்டோரின் சுழற்சி முறையிலான போராட்ட தளம் என்பவற்றுக்கு முன்னால் காவல்துறையினர் குவிக்கபடபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப் பகுதிக்கு வருவோர் தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் வவுனியாகாவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் மாவீரர் நாளை முன்னிட்டு காவல்துறையினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.