மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய அருட்தந்தை கைது!

f9142e62 dd81 42ad 9507 70707dc24334
f9142e62 dd81 42ad 9507 70707dc24334

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண ஆயர் இல்லத்துக்கு முன்பாக தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தார்.

குறித்த அருட்தந்தை தற்போது யாழ்ப்பாண காவல்துறை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.