சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

FGF 2
FGF 2

சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து தகவல்களை வழங்க நான்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர், தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கமான 070 – 7555666 இற்கு வட்ஸ்அப் தகவல், குறுந்தகவல் அல்லது காணொளிகளை அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை விட, சுற்றாடல் அமைச்சு – 1991, மத்திய சுற்றாடல் அதிகாரசபை – 1981, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் – 1921 ஆகிய இலக்கங்களுக்கும் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.