கொரோனா அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவை சென்றடையவில்லை- சஜித்

g 7
g 7

கொரோனா அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவை சென்றடையவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழுநிலை விவாதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தனிமைப்படுத்தலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் 10,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆனால், குறித்த பொருட்கள் உண்மையாக 7000 ரூபாய் பெறுமதியானதாகவே காணப்பட்டன.

உதாரணமாக நூடில்ஸ் பெக்கட் 5 என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் 2 பெக்கட்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று சோயாமீட் 5 பெக்கட் என கூறப்பட்டுள்ளது 3 பெக்கட் மாத்திரமே வழங்கப்பட்டன.

இவ்வாறு அனைத்தும் பொருட்களுமே குறைந்தளவிலேயே மக்களை சென்றடைந்துள்ளன.

அதாவது, அரசாங்கத்தின் குறித்த சேவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை.

ஆகவே, பொருட்களாக அம்மக்களுக்கு வழங்காமல் மாறாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10,000 ரூபாயை வழங்கி, அவர்களே பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்துகொடுப்பது சிறந்தது என கருதுகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.