கொரோன தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலங்கள் எரிப்பது கண்டனத்திற்குரியது – ம.தயானந்தன்

vlcsnap 2020 10 19 14h08m10s942

கொரோன தொற்றினால்  உயிரிழப்பவர்களின் உடலங்கள் எரிப்பது கண்டனத்திற்குரியது என மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ம.தயானந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் வேளையில் சிறுபான்மை மக்களுக்கு இடையிலும்  அரச இயந்திரத்திற்கு இடையிலும் பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது பல சுற்று பேச்சுக்கள் நடைபெற்று கொண்டிருக்கின்ற வேளையில் 20 நாளான சிசுவின் மரணம் என்பது அனைத்து மக்களையும் வருந்த வைக்கின்ற செயலாக இருக்கின்றது.

தமிழ்,முஸ்லீம்,சிங்களம், மூன்று இனங்களுக்கிடையில் இறைவனால் நியதி உருவாக்கப்பட்டது போல் சிறு வயதில் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வது தான் வாழ்வியலில் நடக்கின்ற விடையம்.

ஒரு மாத்திற்கு உட்பட்ட குழந்தை இறந்தால் வெள்ளை துணியில்  போர்த்து கையில் கொண்டு சென்று அடக்கம் செய்வதுதான் இங்குள்ள அனைத்து இனத்தின் முறையாக இருக்கின்றது.

அந்த இருபது நாளேயான பிள்ளைக்கு எவ்வாறு கொரோன தொற்றியது என்று கேள்விகள் எழுந்துள்ளன இது உண்மையில் இலங்கையில் வாழ்கின்ற ஒட்டு மொத்த சிறு பிள்ளைகளுக்குரிய விடையமாக கருதுகின்றோம்.
இந்த அரசினை வினயமாக நாங்கள் கேட்டுக்கொள்ளும் விடையம்  சிறுபிள்ளைகள் தெய்வதற்திற்கு சமம் என்று கூறுகின்றார்கள்

தற்போது வடக்கில் கொரோனா அதிகரித்து வருகின்றது இங்கும் அப்படி நடந்தால் அது அனைவருக்கும் உரிய விடையமாக கருதுகின்றோம். குழந்தையின் மரணம் என்பது தாங்கமுடியாத மரணம் அந்த உடலை எரிப்பது என்பது வருத்தத்திற்குரிய விடையம்.

வெளிநாடுகளில் ஒரு உடலில்  இருந்து உயிர்  பிரியும் போது அந்தந்த மார்க்கமாக நடந்துகொண்டிருக்கின்றது எங்கள் நாட்டில் இந்த பிரச்சனை பூதகராமக காணப்படுகின்றது.
இந்த நாட்டின் ஜனாதிபதி,பிரதமர்,மருத்துவத்துறையினர் இதனை மாற்றி அமைக்கவேண்டும்.
20 நாளான சிசுவின் உடலத்தினை எரிப்பதானது இலங்கையில் வாழ்கின்ற மூவின மக்களும் கண்கலங்குகின்றார்கள் இதற்கு மாற்று வழியினை பிரதமர் சுகாதர துணையினர் ஒரிரு தினங்களுக்குள் முடிவினை தரவேண்டும் என்றும் இதற்கான கண்டனத்தினையும் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் குழந்தைக்கு அப்பாவாகியவர்கள்தான் அவர்களிடத்திலும் இந்த நடைமுறை நடந்தால் இதனை அவர்கள் பொறுப்பார்களா சட்டத்தினை மாற்ற முடியுமா என்று கேள்வியினை முன்வைக்கின்றேன்.

அனைத்து மதங்களின் மார்க்க வழியில் செய்ய வேண்டும்  இதற்கான மாற்றத்தினை இந்த அரசு முன் வைக்கும் என்றும் நம்பிக்கை கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.