வவுனியாவில் தாலம் ஓலை- 03 நூல் வெளியீட்டு நிகழ்வு

DSC06891 1
DSC06891 1

வவுனியா மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் “தாலம்” ஓலை- 3 வெளியீட்டு விழா நிகழ்வு வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (15) இடம்பெற்றது.

கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.கலிஸ்ரஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக கூட்டுறவு உதவி ஆணையாளர் இந்திராசுபசிங்க கலந்து கொண்டார்.

நூலின் முதற்பிரதியை வவுனியா மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பிரேமதாஸ் வெளியிட்டு வைக்க மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன பெற்றுக்கொண்டார்.

நூலிற்கான விமர்சன உரையை ஓய்வுநிலை சிரேஸ்ட விரிவைரையாளர் நா.பார்தீபன் நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு மாணவர் கல்விக்கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறப்பாக செயற்பட்ட அங்கத்தவர்களுக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கி கௌரவி்க்கப்பட்டனர்.