இலங்கை ரூபாவுக்கெதிராக அமெரிக்க டொலர் வீழ்ச்சி!

Srilanka rupees Vs Dollers
Srilanka rupees Vs Dollers

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் இலங்கை ரூபாவுக்கெதிராக அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 185.20 ஆகவும் விற்பனை ரூ. 190.02. ஆகவும் இன்று காணப்பட்டது.

கடந்த வாரம், அமெரிக்க டொலர் ஏழு மாதங்களில் அதிகரிப்புடன் கொள்முதல் விகிதம் ரூ. 189.08 ஆகவும் விற்பனை விகிதம் ரூ. 194.66.ஆகவும் காணப்பட்டது.

இதற்கிடையில், அமெரிக்க டொலரின் ஸ்பொட் பரிமாற்றம் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது ரூ. 190.28 இன்று ரூ. 187.96 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.