மஹர சிறைச்சாலை மோதல்:இறுதிவிசாரணை அறிக்கைநீதி அமைச்சரிடம் கையளிப்பு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, அதன் இறுதி அறிக்கையை நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளித்துள்ளது.

குழுவின் தலைவரான முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில்   இறுதி அறிக்கை நேற்று கையளிக்கப்பட்டது.

நீதி அமைச்சர் அலி சப்ரியால் குறித்த நிபுணர்கள் குழு கடந்த மாதம் 29ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 7ஆம் திகதி கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாத காலத்துக்குள் முழுமையான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.