மட்டக்களப்பு தலைமையக காவல் நிலைய காவல்துறையினர் 3 பேருக்கு கொரோனா!

WhatsApp Image 2021 01 03 at 12.08.25 1
WhatsApp Image 2021 01 03 at 12.08.25 1

மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் 52 காவல்துறையினருக்கு அன்டிஜன் பரிசோதனை இன்று திங்கட்கிழமை (04) மேற்கொள்ளப்பட்டது இதில் 3 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோன தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதுடன் 550 காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன்தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்த மானமாக அன்டிஜன் பரிசோதனைகளை சுகாதர அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தலைமைய காவல்துறையினருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டது.

இதனையடுத்து திங்கட்கிழமை குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றும 52 காவல்துறையினருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனாதொற்றுறுதிகண்டறியப்பட்டதையடுத்து 3 பேருக்கு தொற்றுறுதி கண்டறியப்பட்டது. இதில் 50 காவல்துறையினரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுறுதி கண்டறியப்பட்டவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஆரையம்பதியில் ஒருவருக்கும் , மட்டக்களப்பில் 3 காவல்துறையினர் மற்றும் ஒரு தாதியர் உட்பட 7 பேருக்கும், காத்தான்குடியில் 6 பேருக்கும், கோறளைப்பற்று மத்தியில் காத்தான்குடியைச் சோந்த வர்தகர்கள் 4 பேர் உட்பட 5 பேருமாக மாவட்டத்தில் 19 பேருக்கு தொற்றுறுதி கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

WhatsApp Image 2021 01 03 at 12.08.25 1