”ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்படையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட வங்கிகள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து துறைகளையும் ஒன்றினைத்து குறித்த கிராமத்தை பல்துறை சார் உற்பத்திகளை இனங்கண்டு அவர்களின் பொருளாதாரத்தை மெருகூட்டி பசுமையான கிராமமாக மாற்றும் நோக்கிலமைந்த “ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(05) மு.ப 9.00மணிக்கு மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

FB IMG 1609851980499


வட மாகாணத்தில் விவசாயத்துறையையும் மக்களின் ஏனைய வாழ்வாதார நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் கடந்த 2020.11.20ம் திகதியன்று மாவட்ட அரசாங்க அதிபர்கள், வட மாகாணத்திலுள்ள வங்கிகளின் உயரதிகாரிகள், விவசாய அமைச்சு அவைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு வங்கி ஒரு கிராமம் என்ற அடிப்படையில் தத்தெடுத்த அக்கிராமத்தில் உள்ள வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு நிதியீட்டம் மற்றும் வசதிப்படுத்தல்களை செய்வதனூடாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலமைந்த சிந்தனையில் மேற்படி திட்டத்ததை செயற்படுத்தவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

FB IMG 1609851987551


அதனடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டத்தில் இயங்கிவரும் வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள், முகாமையாளர்கள், விவசாய துறை உள்ளடங்கலான பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஒன்று கூடி பொருத்தமான கிராமங்களை தெரிவு செய்வதனூடாக குறித்த செயற்றிட்டத்தை  மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்டுத்தவதற்கான முன்னோடிக் கலந்துரையாடலாக குறித்த கலந்துரையாடலானது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1609851975373


வங்கிகள் கடன்திட்டங்களை வழங்குவதிலிருந்து சற்று மாறுபட்டு சகல துறைகளையும் ஒருங்கிணைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலமைந்த வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு மிகப்பொருத்தமானவற்றை இனங்கண்டு பயிற்சிகள் உற்பட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து தொடர்ச்சியாக கண்காணிப்பு மூலம் குறிப்பாக இளம் சமூகத்தை பொருளாதார அபிவிருத்தி சார்ந்து முன்னேற்றும் வகையில் குறித்த செயற்றிட்டம் அமைந்துள்ளது.

FB IMG 1609851995503


இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், சமுர்த்தி உதவிப் பணிப்பாளர், மாவட்டத்திலுள்ள வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள், முகாமையாளர்கள், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், உதவிப் பிரதேச செயலாளர், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவிப்பணிப்பாளர், விவசாய போதனாசிரியர்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு, தொழில்துறைத் திணைக்கள, தெங்கு அபிவிருத்தி சபை, மாவட்ட விவசாயப் பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.