சர்வதேச மனித மேம்பாட்டு அறிக்கையின் சிறப்பு பதிப்பு இன்று வெளியீடு!

images 2
images 2

சர்வதேச மனித மேம்பாட்டு அறிக்கையின் 30 ஆவது வருட சிறப்பு பதிப்பு இன்று இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டப் பிரிவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டப் பிரிவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ராபர்ட் ஜுகாம் இனால் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய புவியியல் சகாப்தத்தில் மனித சமூகம் உள்நுழையும்போது, அனைத்து நாடுகளும் தமது பாதையை மறுசீரமைக்க வேண்டிய நேரம் இது என குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை தனது உயரிய இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், மனித மேம்பாட்டு குறியீட்டில் இலங்கை 34 இடங்கள் முன்னேறியுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.