சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கைப்பற்றல்!

New Project 10
New Project 10

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட ஆயிரத்திற்கு 600 கிலோகிராமிற்கு மேற்பட்ட உலர் மஞ்சள் தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், இதன்போது நான்கு இந்தியப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.-

குறித்த சந்தேநபர்கள், புத்தளம் கடற்கரைப் பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஆயிரத்து 680 கிலோகிராம் உலர் மஞ்சள் மற்றும் 150 கிலோகிராம் ஏலக்காய் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான முறையில் இலங்கை கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த டிங்கிப் படகொன்றை, சோதனைக்கு உட்படுத்திய போதே, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் தொகையை, இலங்கையிலுள்ள சில கடத்தற்காரர்களுக்கு வழங்குவதற்கே, சந்தேநபர்கள் முயற்சித்துள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட டிங்கி படகு உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்கள், கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக, கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.