புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

1 40
1 40

புதுக்குடியிருப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் காவற்துறை அதிரடிப்படையினர் நேற்றிரவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

197 கிராம் 340 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் இவற்றின் பெறுமதி சுமார் இருபது இலட்சம் அளவில் காணப்படும் எனவும் காவற்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஐஸ் போதைப்பொருள் மேலதிக பரிசோதனைகளுக்காக மன்னார் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.