கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த 3411 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கிவைப்பு!

image 12 1024x768 copy
image 12 1024x768 copy

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி செய்லான் வீதி தொடக்கம் கல்முனை நகர் வாடி வீட்டு வீதி வரைக்கும் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3411 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உலர் உணவுப் பொதிகளை வினியோகிக்கும் நடவடிக்கைகள் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் இன்று (07.01.2020) மாலை இராணுவத்தின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டன.

இரண்டு வாரங்களுக்கு தேவையான பத்தாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் கிராம சேவையாளர்கள் ஊடாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு மூன்றரை கோடி ரூபா நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக இதன்போது பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான்,சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், , நிர்வாக கிராம உத்தியோகத்தர், யூ.எல்.பதுறுத்தீன் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள் அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.