கொரோனா தொற்றுறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும்- சுகாதார அமைச்சர்!

115699137 pavithra 011
115699137 pavithra 011

கொரோனா தொற்றுறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என வைரஸ் தொடர்பான நிபுணர்களில் சிலர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிடம் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கொரோனா தொற்றுதியான சரீரங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிபுணர்கள் குழுவிற்கு அந்த அறிக்கையை கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.