முள்ளிவாய்கால் தூபியானது அழிக்கப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும்- சட்டத்தரணி மாணவன் டினேசன்

DSC 0428
DSC 0428

முள்ளிவாய்கால் தூபியானது அழிக்கப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும் என யாழ் பல்கலைகழகத்தின் முன்னால் சட்டத்துறை மாணவனும், யாழ்பல்கலை கழகத்தின் சட்ட மாணவர் சங்கத்தின் முன்னால் செயளாலரும், தமிழரசு கட்சியின் உப தலைவருமான சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு இனத்தின் நினைவுகளை சுமத்தல் மற்றும் அடையாளப்படுத்தல் அதனை அடுத்த சந்ததியினருக்கு கடத்துதல் என்பது ஒரு இனத்தின் இருப்பை தக்கவைப்பதற்கான நடவடிக்கை ஆகும். இவ்வாறு முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபியானது அழிக்கப்பட்டது ஒரு ஜனநாயக விரோத செயலாக காணப்படுவதோடு தமிழர்களின் கட்டமைப்பை சிதைப்பதற்கான  செயற்பாடகவே பார்க வேண்டியதாக உள்ளது.

தமிழர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான முள்ளிவாய்கால் நினைவேந்தலையோ அல்லது தங்களுடைய கடந்த கால நினைவுகளையோ எதிர்கால சந்ததிகளுக்கு கடத்துதலையோ அதை அடையாளப்படுத்துவதையோ இந்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதையே இவ்வாறான சம்பவங்கள் வெளிப்படையாக உணர்த்துகின்றன.

தொடர்சியாக இலங்கை அரசாங்கம் இறந்தவர்களை நினைவு கூறும் விடயத்தில் கூட நீதி மன்றம் ஊடாக கட்டளை பெறப்பட்டு அவர்களுடைய நினைவேந்தல்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்சியாக தமிழர்களின் உணர்வுகளை அடக்கும் செயலாகவே இவற்றை பர்க்க கூடியதாக உள்ளது.

எனவே இவ் அரசாங்கமானது தமிழர்களின் நல்லெண்ணத்தை பெற வேண்டுமானால் தமிழர்களின் உணர்வுகளுக்கு, அபிலாசைகளுக்கும் மதிப்பளித்து அவற்றை புரிந்து கொள்ளகூடிய அரசாங்கமாக இருக்கவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மத்திரமே இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட்டு அமைதியான சூழல் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.