யாழில் இன்று 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47 வது நினைவு அஞ்சலி அனுஸ்டிப்பு!

VideoCapture 20210110 103701
VideoCapture 20210110 103701

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47 வது நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

VideoCapture 20210110 103748


இன்று காலை 9.30 மணிக்கு யாழ். முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில்   உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்டுள்ளது.


இதன்போது தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

VideoCapture 20210110 103716

ஆயிரத்து 974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு,காவற்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது.

VideoCapture 20210110 103741


தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் ஆயிரத்து 964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும், வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 

VideoCapture 20210110 103725


26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின் போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆயிரத்து 964 ஜனவரி 7 ஆம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றது.
முதலாவது உலகத் தமிழாராச்சி மாநாடு மலேசியாவிலும் இராண்டாவது உலகத் தமிழாராச்சி மாநாடு தமிழகத்திலும், மூன்றாவது மாநாடு பிரான்சிலும் நடைபெற்றது. பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் நான்காவது மாநாட்டை ஈழத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. 


இதன்படி நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாடு ஆயிரத்து 974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை இடம்பெற்றது. தவத்திரு தனிநாயகம் அடிகளாரினால் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ ரீதியாக நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

VideoCapture 20210110 103728


சைவமும் தமிழும் தழைத்தோங்கிய ஈழத்தில், இஸ்லாமியத் தமிழ், கிறிஸ்தவத் தமிழ் இலக்கியங்களால் செழுமை பெற்ற ஈழத்தில், தனித்துவமான பண்பாடும் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க ஈழத்தில், உலகத் தமிழராயச்சி மாநாடு பெரும் எழுச்சியாய் நடந்தது.

VideoCapture 20210110 103738


யாழ் நகரமே பாரம்பரிய பண்பாடு கோலத்தின் காட்சியில் இருந்தது. தாம் பேசும் மொழிக்கு தமிழர்கள் விழா எடுத்தனர். ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கான கருவியாக துப்பாக்கி மாத்திரமின்றி மொழியும் பிரயோகிக்கப்பட்டது.
ஆயிரத்து 956 ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மொழி ஒடுக்குமுறைக்காகவே என்பது வரலாறு.
இலங்கை அரசு தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்கும் அப்பால், மொழி, பண்பாட்டு ரீதியாகவும் தீவிரமாக ஒடுக்குகிறது என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது. பிற்காலத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னணிக் காரணங்களில் ஒன்றாக இந்த படுகொலை குறித்த வடுவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.