மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 தினங்களுக்கு வர்த்தக நிலையஙகளுக்கு பூட்டு: நாளை முதல் பாடசாலை கல்வி நடவடிக்கை ஆரம்பம்- கருணாகரன்

IMG 5830 1
IMG 5830 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14 ம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய தேவைகளான  மருந்தகம் ,குறோசறி, பொதுச்சந்தைகள், உணவகங்கள், பேக்கரி தவிர்ந்த ஏனைய  வர்தக நிலையங்கள் பூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் 25 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்கு நாளை திறக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.


மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற மாவட்ட கொரோனா செயணிக் கூட்டத்தில் எடுக்கப்படட தீர்மானங்கள் தொடர்பாக  ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாளை அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் திறப்பது சம்மந்தமாக ஏற்கனவே கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனை எவ்வாறு கையாள்வது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட வலயக்கல்வி பணிபாளர்களை அழைத்து கூடிய போது அதற்கிணங்க தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 25 பாடசாலைகளை தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகளுக்கு திறக்கப்படும்.


அதேவேளை சில பாடசாலைகள் அந்த இடவசதிக்கு ஏற்ப அப்பகுதி சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அந்த வலயக்கல்வி பணிப்பாளர்கள் வகுப்புக்ளை எவவாறு நடாத்துவது என தீர்மானத்தை எடுத்து செயற்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் வாரம் பொங்கல் வாரமாக இருப்பதால் கடைகளில் அதிகமாக பொது மக்கள் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்பட அதிகமான வாய்ப்புக்கள் இருக்கின்றது. இதனடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமையில் இருந்து எதிர்வரும் 14 ம் திகதி வியாழக்கிழமை வரை  மருந்தகங்கள், குறோசறி, பொதுச்சந்தை, உணவகங்கள், ஆகிவற்றை தவிர்ந்த ஏனைய வர்த்தகநிலையங்கள் மூடுவதாகவும். உணவகங்களில் இருந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் எடுத்துச் செல்ல மட்டும் அனுமதி வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


இதனை மீறுபவர்களக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும். தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து தொடர்ந்து வழங்கும் நடவடிக்கையில் அந்த பகுதி பிரதேச செயலாளர் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.