பாடசாலை மாணவனின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

201912301525535658 Women Struggle against Amended Citizenship Act SECVPF 1
201912301525535658 Women Struggle against Amended Citizenship Act SECVPF 1

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்தும் , மீளவும் தூபி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் , பல்கலை சூழலில் உள்ள காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை முதல் பல்கலை கழக மாணவர்கள் பல்கலை முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்.இந்துக்கல்லூரி உயர் தர மாணவன் , பல்கலை கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தானும் போராட்டத்தில் கலந்து கொண்டான்.

பாடசாலை மாணவனின் உணர்வுகளை மெச்சிய , பல்கலை கழக மாணவர்கள், அவனது உடல் நிலையை கருத்தில் கொண்டும் குடும்ப சூழல் மற்றும் தாயின் நிலைமையை கருத்தில் கொண்டும் அவனது போராட்டத்தை மாலையுடன் கைவிட கோரி பாடசாலை மாணவனின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை பல்கலை கழக மாணவர்கள் தாம் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.