கிழக்கு மாகாணத்தில் 32 பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் – மாகாண ஆளுநர்

IMG ORG 1574756668504
IMG ORG 1574756668504

கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 32 பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

இதன்படி காத்தான்குடி பிரதேசத்தில் 25 பாடசாலைகளும் கல்முனைப் பிரதேசத்தில் 5 பாடசாலைகளும் திருக்கோவில், அம்பாறை பிரதேசங்களில் ஒரு பாடசாலையும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோருடன் ஆளுநர் நடத்திய சிறப்புக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.