மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சில விசமிகள்!

f63a0508f15522cdd92e2a9090280ad7
f63a0508f15522cdd92e2a9090280ad7

தங்களது மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது சில சிங்களவர்கள் மிக மோசமாக தாக்கியதுடன் அவர்களை பிடித்து கட்டி வைத்து நாள் முழுவதும் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை மேச்சத் தரைப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஆறு பண்ணையாளர்களை சிங்களவர்கள் சிலர் பிடித்துச் சென்று மகா ஓயா காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு சிங்களவர்களினால் பிடித்துச் செல்லப்பட்ட பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடாத்தி சித்திரவதை செய்ததாக தாக்குதலுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.