பிரிட்டன் தென்னாபிரிக்காவில் காணப்படும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து அதிகம்- சுடத்சமரவீர

ErhT8G3UcAEOtvK 300x169 1
ErhT8G3UcAEOtvK 300x169 1

இலங்கை வெளிநாட்டவர்களின் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளதால் பிரிட்டனிலும் தென்னாபிரிக்காவிலும் காணப்படும் வீரியமிக்க கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்துள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் நுழைபவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அந்த வகை வைரஸ் காணப்படுகின்றதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


பிரிட்டனிலிருந்து விமானங்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும் வீரியமிக்க கொரோனாவைரஸ் நுழைவதற்கான வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதியவீரியமிக்க வைரஸ் பல நாடுகளிற்குள் நுழைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் புதியவகை வைரசினால் ஆபத்து அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும் என சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.


இலங்கையில் நாளாந்தம் பலர் பாதிக்கப்படுகின்ற நிலையில் மாணவர்கள் மத்தியில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாக பாடசாலைகளில் கல்வி கற்க்கும்போது மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.