சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 1630 பேர் பாதிப்பு

20201207 115655
20201207 115655

சீரற்ற காலநிலை காரனமாக யாழ் மாவட்டத்தில் 525 குடும்பத்தை சேர்ந்த 1630 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் காரைநகர் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 41 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.