வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

kaithu

ரத்கம பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட கபுமுல்ல பகுதியில் நேற்று காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு துப்பாக்கி, 7 தோட்டக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ரத்கம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.