வவுனியா மாவட்டத்தில் விடாது பெய்யும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வவுனியா மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளிற்குள்ளும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

IMG 7025


வவுனியா நகர்பகுதிகளில் வீதிகள் எங்கும்  வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் பூந்தோட்டம், கள்ளிக்குளம் மற்றும் சிறிநகர், கருப்பணிச்சாங்குளம்,திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளிற்குள் உட்புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பை சந்தித்துள்ளது. 

IMG 7034


இதேவேளை வயல் நிலங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளமையால் நெற்பயிர்செய்கையும் அழிவை சந்தித்துள்ளது. அதிக மழைவீழ்ச்சி காரணமாக குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து சென்றுள்ள நிலையில் மேலதிக நீர் வெளியேறி வருகிறது. குறிப்பாக நொச்சிமோட்டை, மூன்றாம் மடு, பாவற்குளம் ஆகிய குளங்கள் வான் பாய்கின்றமையால் குறித்த குளத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களிற்கு செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த வீதிகளூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

IMG 7008


இதேவேளை வவுனியாவில் மழைவீழ்ச்சி தொடரும் பட்சத்தில் தாழ்நிலப்பகுதிகளில் பாதிப்புக்கள் அதிகரிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.