ஈரோஸ் சங்கர் ராஜியின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

IMG 7095
IMG 7095

ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் அபுஜிகாத், நூலின் ஆசிரியருமான, தளபதி சங்கர் ராஜி அவர்களின் பதினாறாவது சிரார்த்த தினம் முல்லைத்தீவில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஈரோஸ் ஜனநாயக முற்போற்கு கூட்டமைப்பின் சிரேஷ்ட உபதலைவர் ரஜிவ் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு அனுஷ்ட்டிக்கப்பட்டது.

முன்னதாக சங்கர் ராஜி அவர்களின் ஆன்ம சாந்தி வழிபாடு ஆலயத்தில் இடம் பெற்றதுடன், மதியம் 12மணியளவில் நினைவு தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தது.

இன்நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பின் அரசியல் துறைச் செயலாளரும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினருமான யோன்சன் லீமா மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் இணைப்பாளருமாகிய த.விஜிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.