மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 24 பேருக்கு கொரோனா!

e57440a7 eb0d0ee1 7da007dd 5c2d7f63 ce9aee0b 4d6dbbca b029155b covid19 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
e57440a7 eb0d0ee1 7da007dd 5c2d7f63 ce9aee0b 4d6dbbca b029155b covid19 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி களுவாஞ்சிகுடி மற்றும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 24 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 420 ஆக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இன்று புதன்கிழமை (13) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக பி சி ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த நிலையில் காத்தான்குடி, ஆரையம்பதி சுகாதாரப் பிரிவுகளில் தலா 4 போர் உட்பட 8 பேரும், வெல்லாவெளி சுகாதார பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார பிரிவில் ஒருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 12 பேர் உட்பட 24 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் 420 ஆக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது இவர்களில் 145 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளர், 278 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாளாந்தம் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.