வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி!

202011100137018759 A further 19 people have been killed by the virus in 1963 SECVPF
202011100137018759 A further 19 people have been killed by the virus in 1963 SECVPF

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவருடன் தொடர்புகளை பேணிய சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் முன்னெடுக்கப்பட்ட அன்டியன் பரிசோதனையில் இருவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவருடன் வவுனியாவில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 148 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.