தலைமைப் பதவியை தக்கவைத்தார் ரணில் ஐ.தே .க. பொதுச்செயலராகப் பாலித நியமனம்

palitha
palitha

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே, இந்தப் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் உதவித் தலைவராக முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், கட்சியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.எஸ்.எம்.மிஸ்பாஹ் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த செயற்குழுக் கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகத் தொடர்ந்தும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.