சிறைச்சாலைகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

202007111228317170 Tamil News Coronavirus 64 Positive cases in Pondicherry SECVPF
202007111228317170 Tamil News Coronavirus 64 Positive cases in Pondicherry SECVPF

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3850 ஆக உயர்வடைந்துள்ளது.

புதிதாக இரண்டு கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,சிறைச்சாலைகளில் கொரோனா  தொற்றாளர்களின்  எண்ணிக்கை இன்று 4274 ஆக பதிவாகியுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மஹர சிறைச்சாலையின் கொரோனா தொற்றாளரின் மரணம் உள்ளடங்களாக சிறைச்சாலைகள் கொத்தணியில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக பதிவாகியுள்ளது