கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்தில் 7 பேர் பலி

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இவ்விபத்துகளில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள், நான்கு பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் என எழுவர் பலியாகியுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இந்த விபத்துகளில் பாதசாரிகள் மற்றும் சிறிய வாகனங்களின் ஓட்டுனர்களே அதிகளவில் பாதிப்படைவதாகவும் எனவே பொதுமக்கள் வீதி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.