யாழ் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் பொங்கல் விழா

138479324 10222178511704487 5879467642449031496 n
138479324 10222178511704487 5879467642449031496 n

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று காலை (14) யாழ்ப்பாணம் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வணக்கத்திற்குரியவர்களான நல்லை ஆதீன குரு முதல்வர், கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் ரிஷி தொண்டுநாதன் ஆகியோர் நேற்று மாலை கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வருகை தந்து பொங்கலுக்குரிய பொருட்களை கையளித்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி , சமய குருமார்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வருகை தந்து எம்மை ஆசிர்வதித்து பொங்கலுக்கு உரிய பொருட்களை தந்தமை பேருவகை அளிக்கிறது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.