எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி!

sakya nugegoda tuition group class 1 768x384 1
sakya nugegoda tuition group class 1 768x384 1

மேல் மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புக்களை நடாத்தச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தனியார் வகுப்புகள் நடாத்துதல் தொடர்பான சுற்றறிக்கையை நேற்றைய தினம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்டதாகவும்,

ஜனவரி 25 முதல் தனியார் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சுகாதார அமைச்சில் இன்றைய தினம் தெரிவித்தார்.

குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மாதம் 15 ஆம் திகதி தனியார் வகுப்புகளை நடாத்துவதற்கான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கையின்படி, ஜனவரி 25 முதல் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 பேர் அல்லது 50% இருக்கை அளவிலான மாணவர்களுக்கு மாத்திரமே வகுப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.