தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்!

c5ea1dc7fe9085a5694b73faa01d72a6 XL
c5ea1dc7fe9085a5694b73faa01d72a6 XL

கொரோனா அச்சம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, பிரதான மார்க்கங்களான வடக்கு மார்க்கம், மட்டக்களப்பு மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கங்களில் இந்த ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொழும்பு கோட்டை – பதுளை கடுகதி ரயில் சேவை காலை 5.55 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

கொழும்பு கோட்டை – கண்டி நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை மாலை 3.35 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

பதுளை – கொழும்பு கோட்டை  கடுகதி ரயில் சேவை காலை 8.30 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

கண்டி – கொழும்பு கோட்டை நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை காலை 6.15 மணிக்கு கண்டி ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

கல்கிசை – காங்கேசன்துறை யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை காலை 5.55 மணிக்கு கல்கிசை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை மு.ப. 11.50 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை  நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

காங்கேசன்துறை – கல்கிசை  கடுகதி ரயில் சேவை காலை 9.00 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு கடுகதி ரயில் சேவை காலை 06.05 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

மட்டக்களப்பு – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் சேவை காலை 06.10 மணிக்கு மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.

இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள்  ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.