இந்திய விஞ்ஞானிகளினதும் முன்னிலை பணியாளர்களிற்கும் மோடி பாராட்டு – மகிந்த ராஜபக்சவின் டுவிட்டர் செய்திக்கு பதில்

modi twitter 300x300 1
modi twitter 300x300 1

இந்திய விஞ்ஞானிகளினதும் முன்னிலைபணியாளர்களிதும் அயராத முயற்சிகள் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்குவகித்துள்ளன என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமரின் பாராட்டு செய்திக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வேகமாக தயாரித்து மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஆரோக்கியமான நோய் இல்லாத உலகத்திற்கான எங்கள் கூட்டு முயற்சிக்கு மிக முக்கியமானது எனவும் மோடி பதிவிட்டுள்ளார்.


இந்தியா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் பாரிய நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளமை குறித்து இந்திய பிரதமருக்கு இலங்கை பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


மிகவும் முக்கியமான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை செலுத்தும் பெரும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளமை குறித்து தனது டுவிட்டர் செய்தியில் பிரதமர் இந்திய பிரதமருக்கும் மக்களிற்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
நாங்கள் இதனை கொரோனா வைரசின் முடிவின் ஆரம்பமாக கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.