ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் – நிமல் சிறிபால டி சில்வா

z p01 Organisers
z p01 Organisers

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊதியக் கட்டுப்பாட்டு சபை சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் செலுத்த எதிர்பார்த்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் நடைபெற்றுள்ளது. இதன் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறுகையில் ,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வர முடியாவிட்டால், ஊதியக் கட்டுப்பாட்டு சபை சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதைக் காட்டிலும் வேறு மாற்று வழி இல்லை.

தற்போதைய நிலைமையில் ஊதியக் கட்டுப்பாட்டுச் சபை சட்டத்தினூடாக இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்க எதிர்பார்க்கின்றோம். இலங்கை பெருந்தோட்ட நிறுவன சம்மேளனம் முன்வைத்த விடயங்கள் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இதன் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் நிச்சயமாக பெற்றுக்கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1105 ரூபாவை பெறுவதற்கான இறுதி முன்மொழிவை இலங்கை பெருந்தோட்ட நிறுவன சம்மேளனம் சமர்ப்பித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.