மேல் மாகாணத்திற்கு வெளியே சுகாதார விதிமுறைகளை மீறிய 29 பேர் கைது!

மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற காரணங்கள் தொடர்பில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை மேற்படி குற்றம் தொடர்பில் 2578 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

இந்நடவடிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென தொிவிக்கப்படுகின்றது.