10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலை

1bc5215c6c913a15564ad9e3939c5dd3 XL
1bc5215c6c913a15564ad9e3939c5dd3 XL

10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டு விலை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நடைமுறையிலிருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலையின் பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கென விநியோகஸ்தர்களுக்கான விலைமனு கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி, மா, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, ரின் மீன் உள்ளிட்ட 10 அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கே கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அத்தியாவசிய உணவுப்பொருட்களை நாடு முழுவதிலுமுள்ள சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.