இலங்கை ஜனாதிபதியின் ராஜதந்திரம்!!

gotabaya met with modi
gotabaya met with modi

இந்தியாவிற்கான தனது அரசமுறை பயணணத்தினை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் மொழி பெயர்ப்பாளரின்றி பங்குபற்றியிருந்தமை பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

எந்தவொரு நாட்டின் இரு தலைவர்கள் சந்திக்கும் போதோ அல்லது அரசமுறை பயணங்களின்போதோ இருவருக்கும் இடையில் மொழிபெயர்பாளர்கள் இருப்பதுதான் வழக்கம்.

ஆனால் வழமைக்கு மாறாக இரு தலைவர்களுக்குமிடையிலான இடையிலான சந்திப்பின் போது மோடிக்கு மட்டுமே மொழி பெயர்ப்பாளர் காணப்படுகின்றார். ஜனாதிபதி கோட்டாபயவுடன் எந்தவொரு மொழிபெயர்ப்பாளரும் இல்லை.

இது இலங்கை ஜனாதிபதிக்கு பல பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்திருந்தாலும் இராஜதந்திர ரீதியில், இருவரிற்குமிடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தாது இருக்கும் நோக்கிலும் இது நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.