கந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு!

4417c3f5 283e 4e2b bef2 e853dd9cd69c
4417c3f5 283e 4e2b bef2 e853dd9cd69c

சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர்.

ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர்.

கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.