19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் நீக்குவேன்?

gota3
gota3

கடந்த அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தத்தினை சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் நீக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் நிறைவேற்றிய இந்த 19 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகவே தோல்வியான ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை நிருவகிக்க வேண்டுமானால் உறுதித் தன்மை அவசியமாகும். கடந்த அரசாங்கத்தில் உறுதித் தன்மை இருக்கவில்லை. இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி முறுகல் நிலைமை தோன்றியது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றால் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.