தனிமைப்படுத்தலில் உள்ள ஆசிரியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

FB IMG 1611807780098
FB IMG 1611807780098

காத்தான்குடி மத்திய கல்லூரியில் கடமையாற்றும் கொரோனா தனிமைப்படுத்தல்  பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு  நிவாரண பொருட்களை இன்று வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள  சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர்.

இவர்களில் கொரோனா தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தனிமைப்படுத்தல் இல்லாத பிரதேசத்திலுள்ள ஆசிரியர்கள் இன ஒற்றுமையை பேனும் வகையில் நிவாரணப் பொருட்களை வழங்கி தமது முன்மாதிரியான செயற்பாாட்டை  வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் நிவாரண பொருட்களை காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.பிர்தெளஸிடம் குறித்த  ஆசிரியர்கள் கையளித்தனர்.

குறித்த நிவாரணப் பொருட்கள்  பாடசாலையில் கடமையாற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்த  ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குமாக  56 பேருக்கு  வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி தொடக்கம் அக்கரைப்பற்று வரையுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் பிரதேசத்திற்கு வெளியில் இருந்து வரும்  ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து  இந்த  உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்து இன ஒற்றுமையை வெளிப்படுத்தியதாகவும், இவ் உதவியை வழங்கிய  ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.பிர்தெளஸ் தெரிவித்தார்.