ஷஹ்ரானின் குண்டுத் தாக்குதல் – சட்ட நடவடிக்கை

easter attack
easter attack

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணத்தை சரியாக இணங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியதன் தேவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். தாக்குதல் நடத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனத்திற்கொள்ளவில்லை எனவும், அதனை மறைப்பதற்காக சில அதிகாரிகள் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்படுவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரியப்படுத்தியிருந்தார்.

இதன்போது, கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,

தாக்குதலுக்கான காரணத்தை சரியாக இணங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட
வேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அபிலாஷையும் அதுவே.

மேலும் ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி இதன் போது இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.